விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 18 வேட்பு மனுக்கள் ஏற்பு : 10 மனுக்கள் நிராகரிப்பு!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 30-03-2026 முதல் 06-04-2026 வரை தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களில், 28 வேட்பு மனுக்களில் 18 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.


மார்க்கண்டேயன் (திமுக), சத்யா (அதிமுக),காசிராம் (தவெக), பாலாஜி ராமச்சந்திரன் (நாதக), பெருமாள் (நாம் இந்தியர் கட்சி), பொன்பாண்டி (அஇபுதமமுக), மாடசாமி (புதிய தமிழகம் கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அஜய்குமார்,கணேசன்,சொக்கர், தேவராஜ், பட்டுராஜ்,பிரபாகர், பொன்னுசாமி,முனியசாமி ராஜசேகரன்,வினோத்குமார், ஜெயக்குமார் என 18 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.


மீதமுள்ள 10 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.