மக்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட ஆட்சி திமுக ஆட்சி : ஏராளமான திட்டங்களை அள்ளிக் கொடுத்த திராவிட மாடல்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பனையூர் தெற்கு, பனையூர்,ஸ்ரீ வைகுண்ட பெருமாள்புரம், கல்லூரணி,சிப்பிகுளம், வைப்பார்,கீழவைப்பார், முகமதுபுரம், கலைஞானபுரம், பெரியசாமிபுரம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மார்கண்டயேன் மக்களுக்கான நண்பகத் தன்மை கொண்ட ஆட்சி திமுக ஆட்சி, திமுக திராவிட மாடல் ஆட்சியில் காலை உணவு திட்டம்,மகளிர் விடியல் பேருந்து, இல்லம் தேடி கல்வி, நலம் காக்கும் ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட எண்ணில் அடங்காத ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது, அதேபோல் விளாத்திகுளம் தொகுதியில் அங்கன்வாடி,நியாய விலைகடை,பயணியர் நிழற்குடை,பேவர் பிளாக் சாலை, கிராமப்புறங்களில் தார் சாலை,சாலை மேம்பாலங்கள், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி என பல்வேறு நலத்திட்ட பணிகளை கடந்த ஐந்தாண்டுகளாக மக்களுக்கு செய்துள்ளேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
நிகழ்வில் திமுக விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து,இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜான் பிரிட்டோ மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.