வந்தே பாரத் ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்- கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு ரயில்வே நிலையத்தை முற்றுகை.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் அதிவேக ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி ரயில்வே நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பப்பட்ட புகாரின் நகல் கோவில்பட்டி ரயில்வே நிலைய அதிகாரியிடம்கொடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார்.ஆர்பாட்டத்தில் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகிகள் முனைவர். ஆ.சம்பத்குமார், கலைச்செல்வன், கருப்பசாமி, ரயில்வே போர்டு முன்னாள் உறுப்பினர் சேதுரத்தினம், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ரவிக்குமார், மருதம் மாரியப்பன், மகாராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆவல்நத்தம் லட்சமணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரபாகரன், மாடசாமி, வழக்கறிஞர் ஜெய்ஶ்ரீ கிறிஸ்டோபர், கலை இலக்கிய பெருமன்றம் ஜெயா ஜனார்த்தனன், மணிமேகலை, டெய்சி பெஞ்சமின், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு அருள்தாஸ், ஐஎன்டியுசி ராஜசேகரன், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை காளிதாஸ், லட்சுமணன், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப் பாண்டியன், உரத்த சிந்தனை சிவானந்தம், மேனாள் நூலக ஆய்வாளர் பூல்பாண்டியன், ஒய்எம்சிஏ ஆர்ம்ஸ்டராங், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், பாண்டியனார் மக்கள் இயக்கம் வழக்கறிஞர் சீனிராஜ், ஜோயல், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அமிர்தராஜ், ஜாஹிர் உசேன், ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுதுரை, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு
வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்- கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு ரயில்வே நிலையத்தை முற்றுகை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வந்தே பாரத் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி தர்ணா போராட்டம்!
அடுத்த
தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடிய வடமாநில இளைஞர் கைது!