ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியநாயகிபுரம் புனித பரலோக அன்னையின் தேர்பவனி திருவிழா நடைபெற்றதுகடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பெருவிழா நாள்தோறும் புனித பரலோக அன்னையின் ஆலயத்தில் நாள்தோறும் இரவில்  திருவிழா திருப்பலி கூட்டு வழிபாடு நடைபெற்றது.முன்னதாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புனித பரலோக அன்னை செபஸ்தியர் சிலுவை மின் ஒளி அலங்கார சப்பரா வீதி உலா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து புனித பரலோக அன்னை தேர் பவனி நடைபெற்றது.பரலோக அன்னை மாதாவிற்கு பக்தர்கள் மெழுகுதிரி பூ மாலை அளித்து பக்தர்கள் பிரசாதமாக பெற்று சென்றன புனித பரலோக அன்னையின் தேர் சென்ற வழி நெடுகிலும் பக்தர்கள் கும்பிடு தானம் செய்து வழிபட்டனர்,  இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித பரலோக அன்னை ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.