ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதாக மின்வாரியத்துறை அதிகாரிகளால் அமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த இடத்தில் புதிதாக  மின்மாற்றி அமைக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இன்றி இரண்டு மின் கம்பங்கள் மட்டுமே பகுதியில் உள்ளது.கோரப்பள்ளம்  ராமசாமிபட்டி கிளாமரம் ரெட்டப்புளி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து வாழை தென்னை கத்தரி மிளகாய் வெண்டை தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான தானியங்களை பயிரிட்டு சாகுபடி செய்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறைந்த மின்னழுத்தம் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நலனை  கருத்தில் கொண்டு  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு  தமிழக அரசு உத்தரவின் பேரில் மின்வாரியத்துறை அதிகாரிகளால்அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆழ்துளை கிணறு மின் மோட்டாரை பயன்படுத்திவிவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பரிதவித்து வருகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் கேட்கும்போதெல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால தற்போது புதிதாக அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில் அதற்கான ஆதாரத்துடன் விவசாயிகள் அதிகளிடம் சென்று கேட்டபோது இருக்கு ஆனா இல்லை என மழுப்பலான பதிலை அளிக்கின்றனர். இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பகுதி விவசாயிகள் பெண்கள் புதிய மின் மாற்றி முன்பாக கடும் வெயிலில்  தரையில் வட்டமிட்டு  முக்காடு அணிந்து அமர்ந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகளும் கேட்டபோது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதாகவும் ஆனா தற்போது மாயமானதாகவும் விளக்கம் அளித்தனர்.