ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு  சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துண ஊழியர்கள் மூலமாக வழங்கிட வேண்டும் மாநில முழுவதும் சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் தேர்தல் கால வாக்குறுதி காலமுறை ஊதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அரசுத் துறைகளில்காலி பணியிடங்களில் பனி மூப்பு அடிப்படையில்முன்னுரிமை அளித்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்  சார்பில்  சமையலர் உதவியாளர் அமைப்பாளர் உள்ளிட்ட 255 பேர் உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் இரத்த கையெழுத்து பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி கோரிக்கைகளை வென்றெடுக்க வரும் 28ஆம் தேதி முதல் சென்னை சமூக நல ஆணையம் அலுவலக முன்பாக காத்திருக்கும்  போராட்டத்தில் தமிழக முழுவதும் ஈடுபட உள்ளனர்.நிகழ்வில் சங்கத் தலைவர் மூக்கூரான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் சாவித்திரி மாவட்ட செயலாளர் கணேசன் உள்ளிட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தமிழர் உதவியாளர் அமைப்பாளர் உள்ளிட்ட 255 பேர் கலந்து கொண்டு ரத்த கையொப்பமிட்டனர்.