இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 266 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்! இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மன்னர் அழகுமுத்துக்கோனின் 266 வது குருபூஜை விழாவை முன்னிட்டுதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லெக்கம்பட்டி கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது. நடு மாடு,சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு, விழா கமிட்டி சார்பாக LED டிவி, குத்துவிளக்கு, மிக்ஸி, ரொக்குப்பணம் ஆகியவை பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.