தேசப்பற்று உணர்வுடன் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம்  தாயின் மணிக்கொடி தேசபக்தி பாடல்களை  56 வயதான உதவியாளர் ! தாமாக முன்வந்து மெல்லிய  ராகத்துடன்  பாடல்களைப் பாடி அசத்தல் அதிகாரிகள்நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளை தெரிவித்து கைதட்டல் .ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றிய அலுவலகத்தில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விவட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலக உதவியாளர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் உதவியாளர்கள்தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றினார்.அதன் பின்னர் தேசிய கீதம் தமிழ் தாய் வாழ்த்து கொடி பாடல் தேசபக்தி பாடல்களை  தான் பாடுவதாக தாமாக முன்வந்த 56 வயதான  உதவியாளர் உத்தம நாதன்   தேசிய கீதம் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கொடி பாடல் தேச பக்தி பாடல்களை ராகங்களுடன் மெல்லிய குரலில் அருமையாக பாடல்களை பாடி அசத்திய அவருக்கு அதிகாரிகள் ஒன்றிய குழு தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலகப் பணியாளர்கள் கைத்தட்டல் எழுப்பி ஆரவாரம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.