கடலாடி
அருகே முளைக்கொட்டு உற்சவ விழா இரட்டை
மாட்டு வண்டி பந்தயம்-பார்வையாளர்
முதியோரை தூக்கி வீசிய வீடியோ காட்சி போலீசாருடன்
பார்வையாளர்கள் காயமடைந்த
முதியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். ராமநாதபுரம்
மாவட்டம் கடலாடி அருகே கடுகு சந்தை முத்துராமலிங்கபுரம் கிராமத்து 22 ஆம் ஆண்டு அழகு வள்ளி அம்மன் ஆலய முளைக்கொட்டு
உற்சவ விழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
நடைபெற்றது.
இதில் இதில்
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை,சிவகங்கை, தேனி,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி பந்தய வீரர்கள்
ஆர்வமுடன் பங்கேற்றனர்.இந்த மாட்டு வண்டி
பந்தயத்தை ஆர்வமுடன் கண்டு ரசிக்க பார்வையாளர்கள் சாலையின் இருபுறமும்
கூடியிருந்தனர்.
அப்போது பந்தயத்தில்
பங்கேற்ற மாட்டு வண்டி சாலையோரமாக நின்றிருந்த பார்வையாளர் முதியோர் மீது முட்டி
மோதி தூக்கி வீசியது,இதில்
நிலைகுலைந்து கீழே விழுந்து காயமடைந்த முதியோரை பாதுகாப்பு பணியில் இருந்த
போலீசார் மற்றும் பார்வையாளர்கள்
அந்த முதியோரை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்தப்
பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க
பணம் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.
விளையாட்டு
கடுகு சந்தை முத்துராமலிங்கபுரம் மாட்டு வண்டிகள் பந்தயம்! பார்வையாளரை தூக்கி வீசிய காளைகள்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உப்பு மூடை சுமை தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்தான பேச்சுவார்த்தை மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
அடுத்த
ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.