மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவிற்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா கடந்த 25-11-2023 புதன்கிழமை காலை சென்னையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். சங்கரய்யா வின் மறைவிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த சங்கரய்யா வின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசியல்
சங்கரய்யா மறைவிற்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா போட்டி!
அடுத்த
தங்க நகைகளை அடகு வைத்து அதிக லாபம் தருவதாக கூறிய ஏமாற்றிய 2 பேர் கைது -பொதுமக்களே உஷார்...