பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் விளாத்திகுளம், எட்டையாபுரம், நாகலாபுரம், புதூர், சோழபுரம், வேடநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.எட்டயபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சார மேற்கொண்டார். அங்குள்ள கடைகள்,வணிக நிறுவனங்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்அப்போது அவர் பேசுகையில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதுதான் நாம் தமிழர் கட்சியின் முக்கிய குறிக்கோள், கொள்கை,மற்ற கட்சிகள் அவர்களின் முன்னேற்றம், தேவைகளை தான் பார்க்கின்றனர் மக்களின் தேவைகளை பார்க்கவில்லை , மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடவில்லை .அவர்கள் டாஸ்மாக் கடைகளத்தான் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர் .மக்கள் சார்ந்த திட்டங்களை கொண்டு நிறைய பள்ளிக்கூடங்களை மூடித்தான் வருகின்றனர். புதிதாக எந்த பள்ளிக்கூடங்களையும் திறக்கவில்லை.கல்வி வளர்ச்சிக்கு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை , பாரதி கண்ட புதுமை பெண்ணாக இந்த மண்ணில் இருந்து தொடங்க மக்களின் ஆதரவு தேவை என்றார்.அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு என்று பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த முரளி என்பவர் நாம் தமிழரின் நேர்மையான அரசியலுக்கு தான் சுயமாக சம்பாதித்த ரூ.1000வழங்குவதாகவும், நாம் தமிழர் கட்சியின் நேர்மையான அரசியல் வெற்றி பெறும் என்று கூறியவாறு வேட்பாளரிடம் நன்கொடை பணத்தை கொடுத்து விட்டு சென்றார்.மதுரையை சேர்ந்த முரளி எட்டயபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த போது தான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பிரச்சாரத்தை பார்த்த பணத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது...இதில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பாண்டி, மாவட்ட மகளிர் அணி அன்னலட்சுமி, விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ரமேஷ்குமார்,பாலாஜி ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் யூசப், வடக்கு மாவட்ட பொருளாளர் செய்யது, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
அரசியல்
நாம் தமிழர் கட்சியின் நேர்மையான அரசியலைப் பாராட்டி கட்சிக்கு நன்கொடை வழங்கிய நபர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்க்கண்டேயன் ஆலோசனை!
அடுத்த
என்னை தொட்டால் PCR வழக்கு தொடர்வேன் என்று மிரட்டல் விடுத்த ரவுடி கைது!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024