வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழகத்தில் திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து தமிழக முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார், இதனை அடுத்த திமுகவினர், தமிழக முழுவதும் வீடு வீடாக மற்றும் தெருமுனை பிரச்சாரம் செய்து, 2021 முதல் தற்போது வரை திமுக அரசின் செய்த சாதனைகள் குறித்த தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. புதூர் மத்திய ஒன்றியம் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சாரக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுமக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டு வந்த புதிய நலத்திட்டங்கள், முதல்வரின் சாதனைகள், திமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரசியல்
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் MLA மார்க்கண்டேயன் சிறப்புரை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
நாடாளுமன்றத் தேர்தல் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024