தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு மாவட்ட செயலாளர் மணிமாடசாமி உட்பட 10க்கும் மேற்பட்ட பாஜக கட்சியை சேர்ந்த இளைஞர்கள், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.புதிதாக இணைந்த பாஜகவினரை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திமுக கட்சி வேட்டிகளை அணிவித்து வரவேற்றார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தாமல், பாஜக கூட்டணி கட்சியான,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிறுத்தியதற்கு தூத்துக்குடி மாவட்ட பாஜக மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது பாஜகவினர் திமுகவில் இணைந்திருப்பது மீண்டும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு சில பாஜக நிர்வாகிகள், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தாததால், திமுகவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக விளாத்திகுளம் தொகுதி அரசியல்வட்டாரங்கள் பேசி வருகின்றனர்....!
அரசியல்
திமுகவிற்கு பாஜக மறைமுகமாக ஆதரவு?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத்திய துணை ராணுவபடை மற்றும் போலீசார் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த
இலவசங்களை தேடி போகக் கூடாது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்திய சுயேச்சை வேட்பாளர்!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024