வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி என்று தமிழக மற்றும்
புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல்
நடைபெற உள்ள நிலையில், அனைத்துக்
கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் தனியார் திருமண மண்டபத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும்
போட்டியிடும்,தூத்துக்குடி
பாராளுமன்ற உறுப்பினரும்,திமுக துணை
பொதுச்செயலாளரும், திமுக மாநில
மகளிர்அணி தலைவி கனிமொழியை ஆதரித்து விளாத்திகுளம் தொகுதியில் தீவிரப் பிரச்சாரம்
மேற்கொள்ளுவது குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் திமுக கழக
நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
இதில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் திமுக பாராளுமன்ற
வேட்பாளர் கனிமொழியை 5 லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு
அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன்,மும்மூர்த்தி, அன்புராஜன், பேரூர் கழக திமுக செயலாளர் மருது பாண்டியன்,
திமுக இளைஞரணி துணை
அமைப்பாளர் மகேந்திரன், தொழிலதிபர்
வாசுதேவன், வெற்றிவேலன்
உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர்...
அரசியல்
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க வேண்டும்! எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற உள்ள பணிகளை எம்எல்ஏ மார்கண்டயேன் ஆய்வு செய்தார்.
அடுத்த
விளாத்திகுளத்தில், திமுக கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024