தமிழக மற்றும்
புதுச்சேரியில் நாளை மறுநாள் ஏப்ரல் 17ம் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில்
தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி
வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு
வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம்
நகர், பங்களாதெரு உள்ளிட்ட
பகுதிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை
ஆதரித்து வீடு வீடாக சென்று, அதிமுக தேர்தல்
வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை
வழங்கி தீவிர வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அதிமுக தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் வேடமணிந்து
"அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்ற பாடலை பாடி
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்தத் தேர்தல்
பிரச்சாரத்திற்கான ஏற்பாட்டினை பிளாக்கிகளும் நகர செயலாளர் மாரிமுத்து ஏற்பாடு
செய்திருந்தார், இந்நிகழ்வில்
ஜெயலலிதா பேரவை வரதராஜ பெருமாள், மாவட்ட பிரதிநிதி
வேல்முருகன், ஆனந்த், மகளிர் அணி ஒன்றிய தலைவி சாந்தி மற்றும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
அரசியல்
எம்ஜிஆர் வேடமணிந்தும், எம்ஜிஆர் பாடல் பாடியும் அதிமுகவினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டாக்டர்.அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்திய விசிக, திமுகவினர்!
அடுத்த
MLA மார்க்கண்டேயன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024