பாரதி கண்ட புதுமை பெண்ணாக வந்துள்ளேன் - நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம் - தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவினா ரூத் ஜோன் பேச்சு! விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் ஜோன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடைய அறிமுக கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரொவினா ரூத் ஜோன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மகாகவி பாரதியார் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் முதன்முதலாக பாரதியார் பிறந்த மண்ணில் பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாரதி கண்ட புதுமை பெண்ணாக தான் வந்துள்ளதாகவும், கோவில்பட்டி,விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து கட்சி நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளனர். பிரச்சனைகளுக்கான தீர்வு நோக்கி பயணம் செய்வோம். இந்த தேர்தலில் எல்லாரும் ஒருங்கிணைந்து வெற்றி நோக்கி பயணித்து வெற்றி பெறுவோம் என்றார்.
அரசியல்
பாரதி கண்ட புதுமை பெண்ணாக வந்துள்ளேன் - நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜென்!
அடுத்த
சிப்பிக்குளம் தீர்த்தக்கரையில் ரூ.20 லட்சம் மதிப்பில் கழிப்பறையுடன் கூடிய உடைமாற்றும் அறை: நீண்டநாள் கோரிக்கைக்கு அடிக்கல் நாட்டு விழா!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024