தமிழக முழுவதும் இன்று இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பேரூராட்சி பகுதிகளில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில், அதிமுகவினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எட்டையாபுரம் பஜார் பகுதி மற்றும் பாரதியார் தெரு, எட்டையாபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினர் ஏராளமானோர் வீடு வீடாகவும், கடை கடையாகவும் சென்று அதிமுக தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி,இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் எட்டையாபுரம் அதிமுக நகரஅவைத்தலைவர் கணபதி, மகளிர் அணி செல்வி,சாந்தி கவுன்சிலர் கருப்பசாமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மற்றும் அதிமுக கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் உடன் இருந்தனர்.
அரசியல்
இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக-வினர் தப்பு தாளங்களுடன் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு : 200க்கும் மேற்பட்ட பெண்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம்!
அடுத்த
போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் கனிமொழி பேச்சு!
இதையும் படிக்கலாம்
அமைச்சர் கே.என்.நேருவை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார்!
09 Oct 2024
ஓலா, ஊபர் போன்ற ஆட்டோக்களை தடை செய்ய வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
அதிமுகவினரை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
26 Aug 2024
விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
11 Aug 2024