இளம்புவனம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணி  விளாத்திகுளம் அருகே உள்ள  இளம்புவனம் கிராமத்தில்  இரட்டை இலை சின்னத்திற்கு திறந்த வெளி வாகனத்தில் நின்றவாரும், வீடு வீடாக நடந்து சென்றும்  தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சின்னப்பன், எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டிஅதிமுக கிழக்கு ஒன்றிய  அன்புராஜ் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.