ஓட்டப்பிடாரம் அருகே பெயிண்டர் மாயம்: மணியாச்சி போலீசார் விசாரணை!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முறம்பன் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் செல்வம்முருகன் (30), இவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த JULAI 5ஆம் தேதி வேலைக்கு சென்றவர் தற்போது வரை வீடு திரும்பாததால், மனைவி பாலசவுந்தரி மணியாச்சி காவல் நிலையத்தில் கணவர் செல்வம் முருகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளார், செல்வம் முருகன் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று மணியாச்சி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.