ஓட்டப்பிடாரம் அருகே நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் இயக்க ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்த ஓட்டப்பிடாரம் MLAசண்முகையா!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஜங்ஷனில், கொரோனா காலங்களுக்குப் பின்பு பெரும்பாலான ரயில்கள் நின்று செல்வதில்லை என்றும், இதனால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அனைத்து ரயில்களும் வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஜங்ஷனில் நின்று செல்ல வேண்டுமென்று, ரயில்வே மதுரை கோட்டை மேலாளர் ஸ்ரீ வஸ்தா வையிடம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கோரிக்கை மனு அளித்தார்.
மேலும் ரத்து செய்யப்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி- (06668-06667) திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்வே மீண்டும் இயக்க வேண்டும்,
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்னர் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவினை வழங்கினார். மேற்படி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத பட்சத்தில் செப்டம்பர் 6 அன்று காலை 10 மணி அளவில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.