ஓட்டப்பிடாரம் அருகே மழையால் சேதமடைந்த கரை உடைப்பு -பெரிய கண்மாயில் நடைபெற்று வரும் கரை சீரமைப்பு பணிகளை ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா நேரில் ஆய்வு செய்தார்"
தமிழகத்தில் கடந்த வருடம் பெய்த கனமழை காரணமாக உடைப்பு ஏற்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பெரிய கண்மாயில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கரை சீரமைக்கப்பட்டு பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.எஸ் சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டு மழை காலத்திற்கு முன்பாக கரையை பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கோரம்பள்ளம் ஆறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர் ராஜ், உதவி பொறியாளர் அஜித்குமார் தொழில்நுட்ப உதவியாளர் பிரபாகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.