மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்.
ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மணியாச்சி, கொல்லங்கிணறு, பாறைகுட்டம், மேலபாண்டியாபுரம், ஒட்டநத்தம், ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மணியாச்சியில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார், தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நிலங்களுக்கு வண்டல் மண் அடிப்பதற்கு ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நடைபெற்ற சிறப்பு முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் சாந்தி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்,வட்டாட்சியர் சுரேஷ், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலாமற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.