ஓட்டப்பிடாரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்த MLA சண்முகையா!


ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராம பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களுக்கு மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம், புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம்,  ஜம்புலிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக புதியம்புத்தூரில் உள்ள ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற சிறப்பு முகாமை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்,தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை  பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டு பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளையும் MLA சண்முகையா வழங்கினார். இந்த முகாமில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.