ஓட்டப்பிடாரம் அருகே சட்ட விரோதமாக மதுப்பாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!


ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த கவர்னகிரி கிராமத்தைச் சேர்ந்த கதிரேசன் (27) என்பவரை, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 40 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.