புதிய மகளிர் பேருந்தினை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் விளாத்திகுளத்திலிருந்து பெரியசாமிபுரத்திற்கு செல்ல பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 79A- புதிய மகளிர் விடியல் பேருந்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மேலும் உலக குடிநீர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையம் உட்புறம் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்கள்.