தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 34 லட்சத்து 26ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளிட்ட நான்கு பணிகளையும் அதனை தொடர்ந்து,

*அரியநாயகிபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 33 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டு சிமெண்ட் சாலை உள்ளிட்ட 5 பணிகளையும்,

*பெரியசாமிபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 35 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம் உள்ளிட்ட ஆறு பணிகளையும் அதனைத் தொடர்ந்து,

*புளியங்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 34 லட்சத்தி 21,000 மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடை உள்ளிட்ட 6 பணிகளையும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மற்றும் திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் ஆன ஏராளமானோர் கலந்து கொண்டனர்.