விளாத்திகுளம் அருகே ரூ.5.29 கோடியில் பனைப்பொருட்கள் குழுமம் அமைப்பதற்கு அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல்..!



தூத்துக்குடி மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் பனைத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதலையும், மதிப்பு கூட்டப்பட்ட பனைப்பொருட்களின் உற்பத்திக்காகவும் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளுக்கேற்ப அவர்களது உற்பத்தி திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு "வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழுமம் அமைக்கப்படும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்திருந்தார். இந்நிலையில் அதன்படி, வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குழும பொது வசதி மையத்தில் ஏற்றுமதி தரத்திலான கருப்பட்டி, பணங்கிழங்கு பவுடர், பனங்கற்கண்டு ஆகியவற்றிற்கான உற்பத்திக்கூடங்கள், உணவுப்பொருள் தாக்கட்டுப்பாட்டிற்கான (NABL) அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடம் பனை சார்ந்த கைவினைப்பொருட்கள் உற்பத்திக்கான பயிற்சிக்கூடம், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதலுக்கான விற்பனைக்கூடம் ஆகியவற்றை அமைப்பதற்காக குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.529.22 இலட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டு சி ஒப்புதல் பெறப்பட்டது. மொத்த திட்ட மதிப்பீட்டில் 95% தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு மீதமுள்ள 5% யேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் குறுங்குழும் சங்கத்தால் முதலீடு செய்யப்பட்டது. இந்த பொது வசதி மையம் அமைவதால் வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சுமார் 120 குறு மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பும், ஆண்டிற்கு ரூ.10 கோடி வருவாயும் ஈட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் நேரடி ஏற்றுமதி வருவாயும் தற்போதைய அளவிலிருந்து 2 மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


இந்த குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நவீன இயந்திரங்களுடான் கூடிய வேம்பார் கருப்பட்டி மற்றும் பனைப்பொருட்கள் உற்பத்திக்காக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சூரங்குடியில் பொது வசதி மையம் தட்டுவதற்காக 23.10.2025 வியாழக்கிழமை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்  மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டப்பட்டினர். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் செந்தில் வேல்முருகன், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இம்மானுவேல், குழும உறுப்பினர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.