அமுதகவி உமறுப்புலவர் 383வது பிறந்த நாள் விழா - அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை!




சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி என்று அழைக்கப்படும்  உமறுப்புலவர் 383வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது  மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உமறுப்புலவர் நினைவிடத்தில் மலர்போர்வை வைத்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.