விளாத்திகுளம் அருகே பாஜக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!



தமிழகத்தின் பல பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் புதூர் மண்டல் சார்பில் நாகலாபுரம் பஜாரில், 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையேற்று இக்கூட்டத்தை நடத்தினார்.  இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேதுராஜ், மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டல் தலைவர் சிவபெருமாள் தலைமையில் மண்டல் பொதுச் செயலாளர் பெஞ்சமின் பாண்டியன், மேலக்கரந்தை வெங்கடேசன் மற்றும் கீழக்கரந்தை எல்லப்பன் செய்திருந்தனர். இந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு கிழக்கு மண்டல் தலைவர் பிரஸ் நேவ், சீனிவாசன், வேல்முருகன், பழனி முருகன், கல்யாணசுந்தரம், செந்தில், தங்க மாரியப்பன், ஜெயராம், கண்ணன், ஆட்டோ ரமேஷ், உமையா செல்வராஜ், லட்சுமணன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில், தற்போது நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பற்றி கட்சி நிர்வாகிகள் விளக்கிக் கூறினர். அதுமட்டுமின்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திமுக அமைச்சர்களையும் பாஜகவினர் கடும் விமர்சனம் செய்தனர்.