தமிழக முழுவதும் வனத்துறை சார்பில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வனத்துறையினர் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொக்கு, நாரை கொக்கு, தண்ணீர் காகம், நீர் வாத்து உள்ளிட்ட பறவைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பெரிய கண்மாய் பகுதியில் 27-01-2024 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில், விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின் அவர்கள் முன்னிலையில் விளாத்திகுளம் பெரிய கண்மாய் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது, இந்த கணக்கெடுக்கம் பணியின் போது வனவர்கள் குமார், பாண்டியராஜ், வணக்கம் காவலர்கள் ஜெயபாலமுருகன், அருண்குமார்,வன உயிரினர் ஆர்வலர்கள் அகமது பாசில் ராமகிருஷ்ணன் மற்றும் வன உயிரின் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.