தமிழக முழுவதும் மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக அனைத்து துறை அரசு அதிகாரிகளும் ஒரே இடத்தில் முகாமிட்டு அந்த பகுதி மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் விரைவாக நிறைவேற்ற வேண்டுமென்று உத்தரவிட்டு தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் தனியார் திருமண மண்டபத்தில் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
News
புதூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
அடுத்த
நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து கொக்கு உள்ளிட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026