விளாத்திகுளம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எப்போதும்வென்றான் - காட்டுநாயக்கன்பட்டி, கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகன் (31) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்பத் தகராறில் மனைவி ராமலட்சுமி அவரை விட்டு பிரிந்து சென்று பிரிந்த நிலையில்,மன வேதனையில் இருந்த முருகன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி,இது குறித்து பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.