விளாத்திகுளம் அருகே GH-ல் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.4 1/2 லட்சம் மோசடி : சாமி...சாமி... எனப்பேசி ஏமாற்றிய திமுக ஆசாமி : பணம் வாங்கிய வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல் துறை NO ACTION...!
"கோவில்பட்டி GH-ல் வைத்து போலி APPOINTMENT LETTER-ஐ பவ்வியமாக கொடுத்த மீசை மனோகரனுக்கு திமுக அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் -உடன் லிங்க்..?" - பரபரப்பு வீடியோ காட்சிகள்...
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகள் அன்னை தெரசா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். இவர் திருமணமாகி கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகியான சின்னப்பர் மற்றும் மீசை மனோகர் அன்னை தெரசாவிற்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ.4 1/2 லட்சத்தை வாங்கிக்கொண்டு போலியாக பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றியுள்ளனர். இதுபற்றி அன்னை தெரசா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்த மோசடி கும்பல் பற்றி தகுந்த வீடியோ&ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்த நிலையில், இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல் துறை தரப்பில் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட இளம்பெண் அன்னை தெரசா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
எட்டையபுரம் ஆர்.சி.தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் பேண்ட் வாத்தியங்கள் வாசிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அன்னை தெரசா டிப்ளமோ நர்சிங் பயின்றுள்ளார். அன்னை தெரசாவிற்கு திருமணமான நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் எட்டையபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி சின்னப்பர் என்பவர் தனக்குத் தெரிந்த கட்சியினர் மூலமாக அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மீசை மனோகரன் என்பவரை அறிமுகம் செய்துள்ளார். இந்த மோசடி கும்பல் முதற்கட்டமாக அன்னை தெரசாவிடம் தயாநிதி மாறன் என்ற பெயரில் ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து அதில் ரூ.1 1/2 லட்சம் பணம் போட சொல்லியுள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆரோக்கியசாமியின் குடும்பத்தினர் அரசு வேலை கிடைத்தால் தங்களது குடும்பத்தின் வறுமை நீங்கிவிடும் என்ற ஆசையில் வட்டிக்கு கடன் வாங்கி அவர்கள் சொன்னபடி, வங்கி கணக்கில் ஒன்றரை லட்சம் பணத்தை செலுத்தியுள்ளனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மீசை மனோகர் என்பவரிடம் காரில் வைத்து ரூ.3 லட்சத்தைக் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிக் கொண்ட மோசடி கும்பலைச் சேர்ந்த மீசை மனோகரன் போலியாக ஒரு நியமன ஆணையை(Appointment Letter) தயார் செய்து அன்னை தெரசா மற்றும் அவரது தந்தையை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து அதனை அவர்களிடம் கொடுத்து பணியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அன்னை தெரசா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அக்கடிதத்துடன் சென்று கேட்டபோது, மீசை மனோகரன் அளித்த Appointment Letter போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அன்னை தெரசா மற்றும் அவரது தந்தை திமுக நிர்வாகி சின்னப்பர் மற்றும் மீசை மனோகரை செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டதற்கு மழுப்பலாக தொடர்ந்து பதில் கூறி வந்துள்ளனர். இதன் காரணமாக அன்னை தெரசா மற்றும் அவரது தந்தை ஆரோக்கியசாமி தங்களுக்கு வேலை வேண்டாம் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் இந்த மோசடி கும்பல் பணத்தை தராமல் சுமார் 7 மாதங்களுக்கு இடையாக அலைக்கழித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய இந்த கும்பல் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அன்னை தெரசா தான் பணம் கொடுத்து ஏமாந்தது பற்றி புகார் அளித்துள்ளார்.
(அதுமட்டுமின்றி, தொடக்கத்திலிருந்து மீசை மனோகரிடம் செல்போனில் பேசிய உரையாடல்கள், பணம் கொடுத்த வீடியோ மற்றும் பணி நியமன ஆணையை பெற்ற வீடியோ என அனைத்தையும் செல்போனில் ரகசியமாக பதிவு செய்து வைத்த ஆதாரங்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.)
மேலும் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ள மீசை மனோகரன் என்பவரது முகநூல் பக்கத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோருடன் தான் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தகுந்த வீடியோ& ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் காவல்துறையினர் திமுகவைச் சேர்ந்த நபர்கள் மோசடியில் ஈடுபட்டு இருப்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பாதிக்கப்பட்ட பெண் அன்னை தெரசா காவல்துறை மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுபோன்று பலரின் ஏழ்மை நிலையை குறிவைத்து அவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் இந்த கும்பலின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தன்னிடமிருந்து ஏமாற்றிய ரூ.4 1/2 லட்சம் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் அன்னை தெரசா தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.