பா.ம.காவில் என்ன நடக்கிறதோ அந்த நிலைமை மதிமுகவில் வந்துள்ளது. என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுகிறார் வைகோ - முன்னாள் அமைச்சர்*கடம்பூர் செ.ராஜூ* பேட்டி!
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 315வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அவரது நினைவு மண்டபத்தில் இருக்கும் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,திமுக ஆட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் மணிமண்டபங்கள் , நினைவிடங்களை பாரமாரிப்பு செய்யவில்லை.. பல இடங்களில் ஊழியர்கள் இல்லை, எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் இல்லம் சேதமடைந்து மூன்று மாதங்களாக பணிகள் நடைபெறாமல் இருந்தது. தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது பணிகளை தொடங்கியுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் வாரிசுகள் கெளரப்படுத்தவில்லை , அவர்களை திமுக அரசு புறக்கணித்து உள்ளது.
காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் மணிமண்டபம் கட்டப்பட்டு பணியாளர்கள் இல்லை என்பதால் காட்சி பொருளாக உள்ளது. துறைவாரியாக அனைத்திலும் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது, சட்டம் ஒழுங்கு கெட்டு போய் உள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் .
அதிமுகவிற்கு நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார் ஆனால் எந்த கட்சியும் வந்ததாக தெரியவில்லையே என்ற செய்தியாளர் கேள்விக்கு.தேர்தல் கூட்டணி குறித்து எங்களுக்கு இல்லாத அவசரம் உங்களுக்கு ஏன்? இன்னும் ஏழு மாதங்கள் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் கூட்டணி குறித்த கேள்விக்கான பதில் கிடைக்கும்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் இன்று இருட்டிலும் இக்கட்டிலும் தவித்து வருவது திமுக தான் ,எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து திமுக மாணவரணி போராட்டம் நடத்துவதற்கு அருகதை இல்லை...
கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்தியாவிலேயே மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்ட ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். இது மாணவர்களுக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி ஆல் பாஸ் முதல்வர் என்று மாணவர்கள் அழைத்த காலமும் உண்டு. நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்றதும் மாணவர்கள் நலம் கருதி 7.5 சதவீத இட ஒதுக்கீடை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி . அதனால்தான் கடந்த ஏழு ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்று பயன் அடைந்தனர் ,அரசியல் காழ்புரட்சி காரணமாக நடைபெறும் இந்த மாதிரியான போராட்டங்கள் மக்களிடம் எடுபடாது ,சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இக்கட்டன நிலையில் உள்ளார்.
பா.ம.காவில் என்ன நடக்கிறதோ அந்த நிலைமை மதிமுகவில் வந்துள்ளது. என்ன பேசுவதென்று தெரியாமல் பேசுகிறார்.
ஜெயலலிதாவை பார்த்த தவறு என்று கூறும் அவர் மதிமுகவை ஆரம்பித்தது தவறா? வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ மதிமுகவை ஆரம்பித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ,உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டுவதை எதிர்த்து வைகோ பேசிய பேச்சுக்கள் எல்லாம் இருக்கு, எதுவும் அழிந்து போகவில்லை, திமுக வாரிசு அரசியலை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்ட கட்சி மதிமுக,இன்றைக்கு நிலைமை என்ன அதே வாரிசுக்கு பட்டம் சூட்டுவதற்கு தான் முதல் ஆளாக நிற்பேன் என்று சொன்னால் வைகோவிற்கு இருப்பது ஒரு நாக்க அல்லது இரட்டை நாக்கா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்றார்.