கோவில் வாசல் சிறப்பு பேருந்து பார்த்திருப்போம்,ஆனால் இங்க கோவிலுக்குள்ளேயே போற அரசு சிறப்பு பேருந்தை இப்பதான்
பொதுவா தமிழகத்தில் உள்ள பெரிய கோவில் தலங்களுக்கு,பெரிய நகரங்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்து இயக்குவது வழக்கம், அதுவும் குறிப்பாக திருச்செந்தூர் கோவில், மதுரை பாண்டி கோவில், குலசேகரப்பட்டினம், இருக்கன்குடி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு, கோவில் வாசல் சிறப்பு பேருந்து நீக்கப்பட்டத பார்த்திருப்போம் நம்மளும் அந்த பேருந்தில் பயணித்து அந்த கோவிலுக்கு சென்று இருப்போம்.
ஆனா இங்க ஒரு வித்தியாசமான அரசு பேருந்து கோயிலுக்குள்ளே போயிருக்கு!
சரி வாங்க என்ன நடந்துச்சுன்னு பார்ப்போம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டி வழியாக தென்காசிக்கு அரசு பேருந்து தினந்தோறும் இயக்கப்படுவது வழக்கம், இந்நிலையில் வழக்கம் போல விளாத்திகுளத்தில் இருந்து தென்காசிக்கு சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் லட்சுமண பெருமாள் என்பவர் ஒட்டி வந்துள்ளார். பேருந்து 30 கக்கும் மேற்பட்ட பயணிகளோடு கோவில்பட்டி புதுரோடு ரயில்வே நிலைய சாலை வழியாக கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாத்தூர்- கோவில்பட்டி- தூத்துக்குடி இணைப்பு சாலை உள்ள முச்சந்தி விநாயகர் கோவில் வாசலை தாண்டி கோவிலுக்குள் மோதி நின்றது, திடீரென பேருந்து கோவிலுக்குள் போய் மோதி நின்றதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பதறினர், இதில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்நிலையில் அங்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், விபத்தில் சிக்கி சாலையை மறித்து இடையூறாக இருந்த அரசுப் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து ஓட்டுநர் லட்சுமண பெருமாளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்,பேருந்தில் பிரேக் சரியாகப் பிடிக்கவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அந்தப் பேருந்து கோவிலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.