கோவில்பட்டியில் கஞ்சா வழக்கில்  இளைஞர்கள் இருவர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு!


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்  அவர்கள் உத்தரவின் பேரில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய கஞ்சா வழக்கில்,  கோவில்பட்டி சீனிவாச நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (29) மற்றும் கோவில்பட்டி வ.உ.சி பகுதியை சேர்ந்த கணபதி மகன் சுப்ரமணிகண்டன் (26) ஆகிய இரண்டு இளைஞர்களையும்  கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.