கோவில்பட்டி அருகே எலக்ட்ரானிக் எடை தராசு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியில் எலக்ட்ரானிக் எடை தராசு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாலாட்டின்புத்தூர் பட்டறை ஸ்டாப் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (25) மற்றும் முடுக்குமீண்டான்பட்டி பகுதியை சேர்ந்த முகேஷ் குமார்(24) ஆகிய இருவரையும் நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.