கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது.

கோவில்பட்டி இனாமணியாச்சி பகுதியில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது  அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரிய வந்தது இதனை அடுத்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் சேர்ந்த பாண்டி மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.