கோவில்பட்டியில் காட்டுப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது - 10 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல்!




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அருகில் காட்டுப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் சிவசுப்பிரமணியன், பாண்டி, ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் கிருஷ்ணா நகர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்ற இருந்த இரண்டு கார்களை போலீசார் சோதனையிட முயன்ற போது, கார்களில் இருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றுள்ளனர். அப்போது மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த ராமையா மகன் சங்கிலிபாண்டி (39)கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்த நடராஜ் மகன் நாகராஜ் (23) தூத்துக்குடி P&T காலனியைச் சேர்ந்த மாடசாமி மகன் மகாராஜா( 31) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.