கோவில்பட்டியில் உடற்கல்வி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 25பவுன் தங்க நகை மற்றும் ரூ.55 ரொக்க பணம் திருட்டு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் லட்சுமணப்பெருமாள். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி. இவர் அகிலாண்டபுரம் கரிசல்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல தம்பதியினர் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் முத்துராமலட்சுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் உள் கேட் மற்றும் மரக்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25பவுன் தங்க நகை மற்றும் ரூ.55 ஆயிரம் ரொக்க பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.