விஸ்வகர்மா சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாக நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசிய போது, விஸ்வகர்மா சமுதாயத்தை பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பயணியர் விடுதி முன்பு விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும், அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஸ்வகர்மா சமுதாயம் குறித்து தெரிவித்த தவறான கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் தூத்துக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விஸ்வகர்மா சமூக மக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.