கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேர் கைது :400 மது பாட்டில்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் உட்கோட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட,கயத்தாறு காவல் நிலையம் கோவில்பட்டி கிழக்கு,மேற்கு காவல் நிலைய பகுதிகளை சேர்ந்த வினோத், குமார், விஜயகுமார், ரமேஷ்கிருஷ்ணன், முருகன், ஜெயராம், காளிராஜ்,மாரிமுத்து,மாடசாமி,கணேசன்ஆகிய 9 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.