கோவில்பட்டியில் டிஜிட்டல் வடிவிலான புதிய அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம்!
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணியினை தமிழக முழுவதும் அதிமுகவினர் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32 வது வார்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சரும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில், டிஜிட்டல் வடிவிலான புதிய அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இளம் பெண்கள் பாசறை செயலாளர் MRV கவியரசன், மகளிர் அணி செயலாளர் பத்மாவதி கனகசுந்தரம், மாவட்ட கலைப்பிரிவுச் செயலாளர் வேலுசாமி, நகர அவைத் தலைவர் அப்பாசாமி, முன்னாள் நகரப் பொருளாளர் வேல்முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.