சாயல்குடி அருகே  பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற  இரட்டை மாட்டு வண்டிபந்தயம்: வெற்றி இலக்கை நோக்கி சீறி பாய்ந்து சென்ற காளைகள்!


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உசிலங்குளம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி ஸ்ரீ குணவள்ளி ஆலய 19ம் ஆண்டு வருடாபிசேகம் பொங்கல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.

போட்டியில்  பங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து சென்றது, நடைபெற்ற போட்டியில்  ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை,தேனி,  திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் 30 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்,முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் நினைவு பரிசு  வழங்கப்பட்டது. மாட்டுவண்டி எல்கை   பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.