கோவில்பட்டி அருகே அதிமுகவில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி இளைஞர்கள்!


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர்,தங்களது கட்சிப்பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர், குறிப்பாக "விஜய்"யின்  தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் இணைந்து வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்,தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சிதம்பராபுரத்தில் முன்னாள் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை  அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான  கடம்பூர் ராஜீ MLA முன்னிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்ஆர்வி கவியரசன் தலைமையில்,ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்எஸ்பி தர்ஷன் மற்றும் அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று தங்களை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டார்…