பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியரை தவறாக சித்தரித்து படக்காட்சி:வேட்டையனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாபச்சன், பவர் பாஷில் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில் அனிருத் இசையில் உலகம் முழுவதும் வேட்டையன் படம் தற்போது வெளியாகி திரையரங்கு முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு வேட்டையன் வெற்றி பெற வேண்டும் என்று அவர்களின் முரட்டு வயதான ரசிகர்கள் சிலர் மண்சோறு சாப்பிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர் ஒரு சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் உருவப்பதாகைக்கு பால் ஊற்றியும் ரஜினியின் மேல் உள்ள ஈர்ப்பை வெளிப்படுத்தினர்., ஆனால் ரஜினிகாந்தின் நடிப்பில் வேட்டையன் படத்திற்கு மண் சோறு சாப்பிட்டு தனது உடலை வருத்திக்கொண்டு இவ்வளவு முக்கியத்துவம் காட்டும் அந்த முரட்டு வயதான ரசிகர்கள், அவர்களின் குடும்பத்தில் உள்ள தனது தாய் தந்தை, மனைவி பெற்ற பிள்ளைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் நலம் பெற உடல் ஆரோக்கியம் நலம் பெற வேண்டி இப்படி மண் சோறு சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை, சரி அது அவர்களோட தனிப்பட்ட விஷயம், தற்போது வேட்டையன்பட காட்சிகளை காண பொதுமக்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியை படம் பிடித்து, தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். இந்த காட்சி கோவில்பட்டி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியைவும், தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளியையும் படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அந்தக் காட்சியை நீக்கிவிட்டு திரைப்படத்தை ஒளிபரப்ப வேண்டும், இல்லை என்றால் ஒளிபரப்ப விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.