கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. 154வது பிறந்த நாள் விழா - கோவில்பட்டி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை!



கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. 154வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள வ.உ.சி. அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா அதிமுக நிர்வாகிகள் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.