கோவில்பட்டி அருகே கோவாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது:1896 மது பாட்டில்கள் பறிமுதல்!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் காவல் நிலைய போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது கோவாவில் இருந்து வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியின் பின் பகுதியில் பிஸ்கட் மற்றும் ஓட்ஸ் அட்டைப்பெட்டிகளில் இடையே 24 பெட்டிகளில் சுமார் 1896 மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டது தெரியவந்தது, இதனை அடுத்து லாரியின் உரிமையாளரும் ஓட்டுநருமான ராஜாபுதுகுடி பகுதியை சேர்ந்த பலவேசம் மகன் முனியசாமி(34) என்பவரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முனியசாமி கோவாவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து திருநெல்வேலி பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட இருந்ததாக கயத்தார் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.