பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன் முயற்சி ஆகாது:நாராயண் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் தலைவர் க. தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் வழக்கறிஞர் E. பெஞ்சமின் பிராங்கிளின் நடைபெற்ற வேலைகள் குறித்து வேலையறிக்கை சமர்ப்பித்து பேசினார். பொருளாளர் சுபேதார் K. கருப்பசாமி வரவு- செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:-
*️⃣ பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பின் மீது உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்.
*️⃣. தமிழகத்திற்கு தரவேண்டிய பேரிடர் நிவாரண நிதி, கல்வி நிதி, உரிய வரி வருவாய் பங்கீடு, ஆகியவற்றை தராத ஒன்றிய அரசை கண்டித்தும்.
*️⃣. இந்தி திணிப்பைக் கண்டித்தும், இரு மொழி திட்டத்தை ஆதரித்தும்.
*️⃣. கோவில்பட்டியில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைகளை தடுத்திட, கூடுதலாக காவல்துறையில் காவலர்களை நியமிக்க வேண்டும், இரவு மற்றும் பகல் நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும், சட்டவிரோத மது விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி 25.03.25. அன்று கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளிப்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.