கோவில்பட்டியில் போலீசார் மீது கற்கள் வீசி தாக்கமுயன்ற கஞ்சா வியாபாரி கைது!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில், கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையான போலீசார் அங்கு சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கல்லத்தியான் (41) என்பவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது, கல்லத்தியான் போலீசார் மீது கற்களை வீசி தாக்கி ஓட முயன்றுள்ளார், இதனை அடுத்து கல்லத்தியானை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீசார் மீது கற்களை வீசி தாக்கம் முயன்ற கஞ்சா விற்பனையாளரை அதிரடியாக கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இதே போன்று கோவில்பட்டி நடராஜபுரம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சாலைப் புதூர் இ.பி.காலனியை சேர்ந்த செண்பகராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.